கோவை: கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன் குமார் ஜடாவத் மீது மதிமுக முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணசாமி ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சம் ஒழிப்பு துறையில் புகார் மனு அளித்துள்ளார்.
கோவை: கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன் குமார் ஜடாவத் மீது மதிமுக முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணசாமி ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சம் ஒழிப்பு துறையில் புகார் மனு அளித்துள்ளார்.
கோவை மணியகாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி, மதிமுக முன்னாள் மாநகராட்சி கவுன்சிலரான இவர் லஞ்ச ஒழிப்பு காவல் துறை துணை கண்காணிப்பாளரிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.
அதில் கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன் குமார் ஜடாவத் பொறுப்பேற்றது முதல் மாநகராட்சியில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கும் என்ற நிலை உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் 2019 ஆம் ஆண்டில் மாநகராட்சியில் தேர்வு செய்யப்பட்ட பதிவு பெற்ற ஒப்பந்தரதாரர்கள் 329 பேருக்கு உத்தரவு வழங்காமல் லஞ்சம் கேட்டு காலம் தாழ்த்துவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதேபோல, அவிநாசி சாலையில் உள்ள கே.எம்.சி.எச். மருத்துவமனை, புதிதாக கட்டியுள்ள பெரிய நுழைவாயில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளது என குற்றம் சாட்டினார்.
"அங்கேயும், பெரிய தொகை கைமாறி உள்ளது", என கூறிய அவர் மாநகராட்சி ஆணையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளாதாக தெரிவித்தார்.