கோவை: கோவை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 188 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் ஆயிரத்தை கடந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 188 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1480 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதேபோல, கோவையில் கொரோனா தொற்றுக்கு 1131 பேர், மருத்துவமனையில் மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இன்று 17 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.