கோவை: கோவை பீளமேடு அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்த குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை பீளமேடு லால்பகதூர் காலனி பகுதியில் உள்ளது செல்வ விநாயகர் கோவில். இந்த கோவிலில் நேற்று இரவு மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று இரவு கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த அலாரம் ஒலித்ததை தொடர்ந்து கோவில் அருகே வசித்து வரும் பூசாரி மணிகண்டன் கோவிலுக்கு வந்து பார்த்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு உண்டியலிலிருந்த பணம் சிதறிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர் இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பீளமேடு போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் பதிவாகி இருந்த கைரேகளை பதிவு செய்தனர்.
மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகிய வீடியோ காட்சிகள் மூலம் ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். உண்டியல் உடைக்கப்பட்டு பணம் சிதறிக் கிடந்ததால் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டால் மட்டுமே திருடு போன பணம் எவ்வளவு என்பது தெரியவரும்.