கோவை: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் கதவணை நீர்மின் திட்டப் பகிர்மான கழகத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்ட நிலையில், 50க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள வெள்ளிப்பாளையம் ரோட்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செயல்பட்டு வருகிறது. பவானி ஆற்று நீரினை ஆதாரமாக கொண்டு தடுப்பணை கட்டி இரண்டு கதவணை மூலம் 20 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த பவானி கதவனை நீர் மின் திட்டத்தில் அலகு இரண்டில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அன்டர் கிரவுண்ட் பகுதியில் செயல்படக் கூடிய டர்பன் டயனமோ மோட்டார் செயல்படும் இடத்தில் திடீர் விபத்து ஏற்பட்டுள்ளது. மளமளவென தீ பரவியதால் அங்குள்ள கேபிள்கள் முழுவதும் தீக்கிரையாகி ஒரே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
இதனிடையே, தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினர் மற்றும் அன்னூர் தீயணைப்புத் துறையினர் இணைந்து 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.