கோவை: கோவையில் குடும்ப தகராறு காரணமாக பிரிந்து சென்ற மனைவியை அழைக்க சென்ற கணவன், சமாதானம் செய்ய வந்த மனைவியின் சகோதரர்களை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: குடும்ப தகராறு காரணமாக பிரிந்து சென்ற மனைவியை அழைக்க சென்ற கணவன், சமாதானம் செய்ய வந்த மனைவியின் சகோதரர்களை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ஆலாந்துறை அடுத்த மூலப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் ஓட்டுநர் குமரேசன். இவருக்கு வடிவேலாம் பாளையம் பகுதியைச் சேர்ந்த சங்கீதா என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. குடிப்பழக்கம் உள்ள குமரேசன் குடிபோதையில் மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனால் குமரேசனின் மனைவி சங்கீதா கடந்த 10 நாட்களுக்கு கோபமடைந்தவர் தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில், சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த குமரேசன் வடிவேலாம் பாளையத்தில் இருக்கும் தனது மனைவியை அழைத்துவரச் சென்றுள்ளார்.
அப்போது, சங்கீதா குமரேசனுடன் செல்ல மறுக்கவே குமரேசன் தனது மனைவியை அடிக்க முயன்றார். இதனை கண்ட சங்கீதாவின் சகோதரர்களான கருப்பசாமி மற்றும் அஜித் ஆகிய இருவரும் குமரேசனை தடுத்து சமாதனம் செய்ய முயற்சி செய்துள்ளனர். குடிபோதையில் இருந்த குமரேசன் சற்றும் எதிர்பாராத நேரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கருப்பசாமி மற்றும் அஜித் ஆகிய இருவரையும் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த கருப்பசாமி மற்றும் அஜித் ஆகிய இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆலந்துறை போலீசார், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து குமரேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.