கோவையில் பிரபல தங்க நகை தயாரிப்பு நிறுவனத்தில் 4 பேருக்கு தொற்று உறுதி..! நிறுவனம் தற்காலிக மூடல்

கோவை: கோவை ராக்கிபாளையத்தில் உள்ள பிரபல தங்க நகை தயாரிப்பு நிறுவனத்தில் நான்கு ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அந்நிறுவனம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டது.


கோவை: கோவை ராக்கிபாளையத்தில் உள்ள பிரபல தங்க நகை தயாரிப்பு நிறுவனத்தில் நான்கு ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அந்நிறுவனம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டது.

உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தொற்று பரவுவதை தடுக்க தனிமைப்படுத்தப்பட்டு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு தொற்று உறுதியாகும் பொழுது அந்த நிறுவனம் மற்றும் அதை சார்ந்த தொடர்புகள் பூட்டப்படுகிறது.



இந்நிலையில், கோவை துடியலூரை அடுத்த ராக்கிபாளையத்தில் எமரால்டு ஜீவல் இண்டஸ்ட்ரியின் தங்க நகை தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இந்த நிறுவன குழுமத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதேபோல வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பல தொழிலாளர்கள் இந்நிறுவனத்தில் உள்ள விடுதியில் தங்கி வருகின்றனர்.



இந்த நிலையில், விடுதியில் தங்கி வேலை செய்து வரும் ஆண் ஊழியர் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன் கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பதாக தெரியவந்ததையடுத்து அவர் சிகிச்சைக்காக கோவை இ எஸ் ஐ மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

தொடர்ந்து விடுதியில் அவருடன் தங்கியிருந்த 9 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் மேலும் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.



மேலும் நிறுவனம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்து ராக்கிபாளையம் எமரால்டு நிறுவனமும் அருகில் இருந்த அதன் கிளை நிறுவனமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதேபோல், விடுதியில் உள்ள அனைத்து ஊழியர்களையும் தனிமைப்படுத்தி இருக்கும்படி சுகாதாரத்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...