வாலாங்குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சைக்கிளிங் மற்றும் ஸ்கேட்டிங் தளம் அமைக்கும் பணிகள் தீவிரம்!

கோவை: கோவை வாலாங்குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சைக்கிளிங் மற்றும் ஸ்கேட்டிங் தளம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை வாலாங்குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சைக்கிளிங் மற்றும் ஸ்கேட்டிங் தளம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் ரூ.998 கோடி மதிப்பில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, 24 மணி நேரம் குடிநீர் விநியோகம் திட்டம், எல்.இ.டி. மின் விளக்கு, மல்டி லெவல் கார் பார்க்கிங், உக்கடம் லாரிப்பேட்டை இடமாற்றம், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம், வ.உ.சி. பூங்கா விரிவாக்கம், மாநகராட்சி கட்டுப்பாட்டில் குளங்களை அழகுபடுத்துதல், மேம்படுத்துதல் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் குளக்கரைகளை அழகுபடுத்துதல் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக மட்டும் ஸ்மார்ட் சிட்டி நிதியில் பெரும் தொகை செலவிடப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உக்கடம் பெரியகுளத்தில் ரூ.62 கோடி மதிப்பில் பணிகள் நடந்து வருகிறது. கரைகளை அழகாக்க, பூங்கா அமைக்க, வாக்கிங், ஸ்கேட்டிங் தளம் அமைப்பது என பணிகள் நடந்து வருகிறது.

உக்கடம் பெரியகுளத்தை தொடர்ந்து வாலாங்குளத்தின் கரைகளும் ரூ.40 கோடி ரூபாய்க்கு சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. முதல் கட்டமாக வாலாங்குளத்தில் ரூ.23 கோடி மதிப்பில் பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதேபோல், செல்வ சிந்தாமணி குளத்தின் கரைப்பகுதியும் ரூ.31.47 கோடி செலவில் சீரமைக்கப்படுகிறது.



இந்த நிலையில், வாலாங்குளத்தில் மக்களை கவரும் வகையில் சைக்கிளிங் மற்றும் ஸ்கேட்டிங் தளம் அமைக்கும் பணி வேகமாக நடக்கிறது. இது தவிர நடை பயிற்சி தளம் அமைக்கப்படவுள்ளது. இதில் நடைபயிற்சி மற்றும் சைக்கிளிங் தளத்தில் இயற்கை பூங்கா அமைக்கப்படும்.



மேலும், தண்ணீரில் மிதந்து இருக்கும் மிதவை பாலம், சிறுவர்கள் விளையாட ‘பிளேயிங் ஜோன்’ ஏற்படுத்தப்படவுள்ளது. சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களும் அமைக்கப்படும். இதுபோன்ற பல பொழுது போக்கு அம்சங்கள் வாலாங்குளத்தில் அமைக்கப்பட உள்ளன. இந்த பணிகள் ஓரிரு மாதத்தில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...