கோவை அரசு மருத்துவமனையில் மூன்று மாத குழந்தையை தவிக்க விட்டு தப்பியோடிய தாய் - போலீசார் விசாரணை!

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டு அருகே 3 மாத குழந்தையை அருகே உள்ளவரிடம் சிறிது நேரம் வைத்திருக்க சொல்லி விட்டுச் சென்ற தாய் மீண்டும் வராததையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டு அருகே 3 மாத குழந்தையை அருகே உள்ளவரிடம் சிறிது நேரம் வைத்திருக்க சொல்லி விட்டுச் சென்ற தாய் மீண்டும் வராததையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தாய் சேய் குழந்தைகள் நலப் பிரிவிற்கு பிரசவத்திற்காக கோவை உட்பட நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வந்து செல்கின்றனர்.



இந்த நிலையில், இன்று மதியம் சுமார் பன்னிரண்டரை மணியளவில் மூன்று மாத கைக்குழந்தையுடன் வந்த தாய் அருகே இருந்த பெண்ணிடம் தான் கழிப்பிடம் சென்று வந்து குழந்தையை பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர்கள் குழந்தையை பத்திரப்படுத்தி வைத்திருந்தனர்.



ஆனால், மூன்று முப்பது மணி வரை குழந்தையின் தாய் வராததால் சந்தேகமடைந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள புறக்காவல் நிலையத்தில் குழந்தையுடன் சென்று புகார் அளித்தனர். இந்த நிலையில், குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததையடுத்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நிர்வாகத்தினர் குழந்தையை தற்போது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதைதொடர்ந்து பந்தய சாலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த முதற்கட்ட விசாரணையில் அந்தப் பெண் சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.

தொடர்ந்து சிசிடிவி காட்சிகள் கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 3 மாத குழந்தை தாயின்றி அழும் நிகழ்வு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...