திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தகவல்!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதால் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதால் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 308 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 118 ஆக உள்ளது.



இந்த நிலையில், இன்று திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள உஷா தியேட்டர் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், திருப்பூர் மாவட்டத்திற்கு வெளியூர்களில் இருந்து வருபவர்கள் மட்டுமல்லாது காய்ச்சல் அறிகுறி உள்ள அனைவருக்குமே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மேலும் மருந்துக் கடைகள் மூலமாக காய்ச்சல் மருந்துகள் அதிக அளவில் விற்பனையான பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருவதாகவும் அதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா கட்டுக்குள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...