கோவையில் நகைப்பட்டறை உரிமையாளருக்கு வட மாநில தொழிலாளர்கள் மிரட்டல் விடுப்பதாக ஆட்சியரிடம் மனு..!

கோவை: கோவையில் நகைப்பட்டறை உரிமையாளரை வடமாநில பட்டறை தொழிலாளர்கள் மிரட்டுவதாக, நகை பட்டறை உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

கோவை: கோவையில் நகைப்பட்டறை உரிமையாளரை வடமாநில பட்டறை தொழிலாளர்கள் மிரட்டுவதாக, நகை பட்டறை உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

கடந்த வாரம் செல்வபுரம் பகுதியில் உள்ள ஒரு நகை பட்டறையில் தொழிலாளர்கள் சமூக இடைவெளி இன்றியும் முகக்கவசம் அணியாமலும் பணியாற்றிய நிலையில், அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் ராசாமணி நகை பட்டறைக்கு சீல் வைக்க உத்தரவிட்டார்.

இதன் தொடர்ச்சியாக செல்வபுரம், சலிவன் வீதி, தெலுங்குபாளையம் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் இயங்கும் நகைப் பட்டறைகள் மறு உத்தரவு வரும் வரை பட்டறைகளை திறக்க தடை விதித்து மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது.

இந்நிலையில், சலிவன் வீதியில் உள்ள மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவருக்கு சொந்தமான நகைப் பட்டறை ஒன்றில், வடமாநில நகை பட்டறை தொழிலாளர்கள் சுமார் 40 பேர் தனிமனித இடைவெளி இல்லாமலும், முக கவசம் அணியாமலும் பணியாற்றுவதாக அதே பகுதியில் நகை பட்டறை வைத்திருக்கும் பாபு என்பவர் வீடியோ ஆதாரத்துடன் மாநகராட்சிக்கு தகவல் அளித்தார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் தடை உத்தரவை மீறி இயங்கி வந்த நகை பட்டறைக்கு நேற்று, சீல் வைத்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த வடமாநில நகைப் பட்டறை தொழிலாளிகள், அவர்கள் மீது புகார் அளித்த பாபுவை மிரட்டுவதாக நகைப் பட்டறை உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பி1 காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த பட்டறையில் வேலை பார்க்கும் வட மாநில தொழிலாளர்களுக்கு, ஆதார் உள்ளிட்ட எந்தவித அடையாள அட்டையும் இல்லை என்றும் குற்றம் சாட்டிய நகைப் பட்டறை உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...