மேட்டுப்பாளையத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது வழக்குப்பதிவு..!

கோவை: மேட்டுப்பாளையத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை: மேட்டுப்பாளையத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானி ஆறு மாசடைவதை தடுக்கும் வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டு ரூ 91 கோடி மதிப்பீட்டில் பணிகள் துவங்கபட்டன.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளிலும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால், பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள், கடந்த ஓராண்டிற்கும் மேலாக மூடப்படாததால் அந்த வழியே செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.



எனவே, பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்கக் கோரி, மேட்டுப்பாளையம் உதகை சாலையில் தடையை மீறி திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 50 திமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திமுக நகர செயலாளர் முகம்மது யூனுஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ அருண்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம் மற்றும் கட்சித் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும், ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழக அரசையும் உள்ளாட்ச்சித்துறையையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பட்டன.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...