கோவை: கோவை சுங்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெயிண்டிங் தொழில் செய்ய சென்ற இளைஞரை வலுக்கட்டாயமாக மின் சம்பத்தப்பட்ட வேலையை பார்க்கும்படி மேனேஜர் வற்புறுத்தியதால், அந்த இளைஞரை மின்சாரம் தாக்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை: கோவை சுங்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெயிண்டிங் தொழில் செய்ய சென்ற இளைஞரை வலுக்கட்டாயமாக மின் சம்பத்தப்பட்ட வேலையை பார்க்கும்படி மேனேஜர் வற்புறுத்தியதால், அந்த இளைஞரை மின்சாரம் தாக்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை புலியகுளம் பகுதியிலுள்ள ஈஸ்வரன் செட்டியார் லேஅவுட், பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் அந்தோணி குருஸ் (26). பெயிண்டிங் தொழில் செய்து வரும் இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் அந்தோணி குரூஸ் கடந்த சனிக்கிழமை வழக்கம் போல கோவை சுங்கம் பைபாஸ் சாலையில் உள்ள மெட்ரோ பார்க் என்ற அப்பார்மெண்ட்டில் பெயிண்டிங் வேலை செய்ய சென்றுள்ளார்.
அப்போது, அந்த அப்பார்ட்மெண்டின் மேனேஜர் விவேக் மற்றும் மோகன் ஆகியோர் அவ்வளாகத்தில் உள்ள மின்கம்பத்தில் அந்த இளைஞரை பெயிண்ட் அடிக்க வற்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மின்கம்பத்தில் பணிபுரியும் போது தனக்கு ஆபத்து நேரிடலாம் என்பதை உணர்ந்த, அந்தோணி குரூஸ் "நான் மின்கம்பத்தில் ஏற மாட்டேன்" என தெரிவித்துள்ளார்.
இருப்பினும், விவேக் மற்றும் மோகன் அவர்கள் மின்சாரத்தை அணைத்து வைத்து உள்ளதாகவும், ஒன்றும் ஆகாது என அந்தோணியை
வற்புறுத்திதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மேலே ஏறிய அந்தோணி, கம்பத்தின் மீது பெயிண்ட் அடிக்க முற்படும் போது மின்சாரம் தாக்கி மேலே இருந்து தூக்கி வீசப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, அந்த இளைஞர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் காவல் ஆய்வாளர் முருகேசன் உத்தரவின்பேரில் விவேக், மோகன் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 338 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு உரிய இழப்பீடு வேண்டும் எனவும், உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் குடும்பத்தார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.