நீலகிரி: நீலகிரியில் இன்று புதிதாக 40 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. பெரும்பாலும், தனியார் நிறுவன ஊழியர் ஒருவருடைய தொடர்பில் இருந்த நபர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது, என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காரக்கொரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தனியர் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு நபர் மூலமாக பல பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இன்று நீலகிரி மாவட்டத்தில் கண்டறியப்பட்ட 40 கொரானா தொற்று நபர்களை சேர்த்து, பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், நீலகரி மாவட்டத்தில் இதுவரை 93 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், தற்போது 128 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
எனவே, கொரோனா தொற்று மாவட்டத்தில் மேலும் பரவாமல் இருக்க மக்கள் தேவையின்றி பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், முக கவசம் மற்றும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என நீலகிரி ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.