திருப்பூர்: திருப்பூரில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், இன்று புதிதாக 12 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாகவும், ஒருவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதன் மூலம், திருப்பூர் மாவட்டத்தின் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 308 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூர் யூனிவர்சஸ் சாலையில் 27 வயது பெண், மாலம்பாளையத்தில் 26 வயது ஆண், வெள்ளியங்காட்டில் 41 வயதான ஆண் மற்றும் 38 வயதான பெண் உள்பட பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், அப்பகுதியில் கூடுதல் கவனம் செலுத்த அதிகாரிகளுக்கு, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூரில் புதிதாக 303 பேர் என மொத்தம் 2768 பேர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். இதோடு 406 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலை நிறைவு செய்துள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இன்று, 613 பேருக்கு கொரோனா மாதிரி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது 128 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார்.
இதோடு கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றாமலும், முக கவசம் அணியாமலும் பொது வெளியில் 681 நபர்களிடமிருந்து ரூ 86,250 அபராதத்தொகை வசூலிக்கப்பட்டுள்ளது, என தெரிவித்துள்ளார்.
மேலும், திருப்பூர் மாவட்டத்தில், நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயதான முதியவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரழந்துள்ளார்.