திருப்பூரில் அரசு உத்தரவை மீறி கடன் தொகையை வசூலிக்கும் தனியார் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு!

திருப்பூர்: திருப்பூரில் அரசு உத்தரவை மீறி பொதுமக்களிடம் கடன் தொகையை வசூலிக்கும் தனியார் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர்: திருப்பூரில் அரசு உத்தரவை மீறி பொதுமக்களிடம் கடன் தொகையை வசூலிக்கும் தனியார் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. பொதுமக்கள் வேலை இழந்து, வருமானம் இழந்து, உணவுக்கு வழியில்லாமல் அவதியடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் சுய உதவிக் குழுக்கள் கடன், சிறு குறு விவசாயிகள் தொழிலாளர்கள் தனியார் வங்கிகளில், பைனான்ஸ் ஆகியவற்றில் வாங்கிய கடன்களை உடனடியாக கேட்டு துன்புறுத்தக் கூடாது என்றும் அதிக வட்டி வசூலிக்கக் கூடாது என்றும் ஆர்பிஐ மற்றும் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, அந்த உத்தரவை மீறும் விதமாக அதிரடியாக பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம், எச் டி பி பைனான்ஸ் நிறுவனம், எக்விடாஸ், எல்என்டி போன்ற தனியார் நிதி நிறுவனங்கள் கொடுத்த கடனுக்கு பல மடங்கு வட்டியுடன் கடனை வசூலிப்பதற்காக தற்போது களமிறங்கியுள்ளனர்.

ஒவ்வொரு வீடாக கலெக்சன் என்ற பெயரில் அடியாட்களை அனுப்பி வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் அத்துமீறி வரும் செயல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. காவல்துறையும் இதனை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.



இந்த நிலையில், ஏழைகளை வாட்டி வதைக்கும் இதுபோன்ற தனியார் நிறுவனங்களின் லைசென்ஸை ரத்து செய்ய வேண்டும். மேலும், கடன் கேட்டு தொந்தரவு செய்யாமல் காவல்துறை தக்க பாதுகாப்பு கொடுக்க வேண்டுமென வலியுறுத்தி சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தினர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...