கோவை: விவசாயிகளுக்கு இ பாஸ் வழங்கிட வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

விளை நிலங்களில் விவசாய பொருட்களை அறுவடை செய்யவும், சந்தைப்படுத்தவும் அதற்காக வரும் விவசாயிகள் விவசாய கூலிகளுக்கு இ பாஸ் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட மனுவில், கோவை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் விவசாயிகள் வெங்காயம், தக்காளி, மூட்டைகோஸ், வாழை, தென்னை, வெண்டைக்காய் என பயிர் வகைகளை விவசாயம் செய்து வருகின்றனர்.
மாவட்ட எல்லைப்பகுதிகளில் விவசாயம் செய்யும் விவசாயிகள், விவசாய வேலைக்கு வரும் கூலி தொழிலாளிகள் என பல்வேறு தரப்பினரும் அருகில் உள்ள மாவட்ட எல்லைப்பகுதிகளில் இருந்து வருபவர்களாக இருக்கிறார்கள். ஊரடங்கு காரணமாக விளைபொருட்களை அறுவடை செய்ய கூலி ஆட்கள் வருவதில் சிக்கில் உள்ளது.
இந்த நிலையில், இவர்களுக்கு இ பாஸ் வழங்க மறுக்கப்படுவதால் சிரமம் இருப்பதாகவும் விவசாயிகளுக்கு இ பாஸ் வழங்க வேண்டும் எனவும் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் உள்ள ஆட்களை முழுமையாக விவசாய பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் விவசாயத்திற்கு நிலவி வரும் ஆட்கள் பற்றாக்குறை குறையும் மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.