கோவை: மரணிக்கும் ஒவ்வொரு யானையின் உயிர்வலியும் நமது நெஞ்சை துளைத்து கொண்டு தான் இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் கடந்த மாதம் 11ம் தேதி தேன்கணிக்கட்டை பகுதியில் ஒரு ஆண் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு இரவோடு இரவாக சத்தியமங்கலம் வனப்பகுதியில் விடப்பட்டது.
ரேடியோ காலர் பொருத்தப்பட்ட யானையை முதுமலை மற்றும் சத்தியமங்கலம் வனசரகத்தை சார்ந்த குழுவினர் ஒரு மாதமாக கண்காணித்து வந்தனர். அவ்வப்போது மேய்ச்சலில் ஈடுபட்டுள்ளதையும் பார்த்திருந்தனர்.
சில நாட்களுக்கு முன்னர் தெங்குமரஹாடா வழியாக சீகூர் வனப்பகுதியில் இருப்பதையும் கண்டறிந்தனர். ஆனால் சிக்னல் மூலம் யானை இருக்கும் இடத்தை கண்டறிந்த வனப்பகுதியினர் அந்த இடத்திற்கு சென்று பார்க்கையில் யானை இறந்து இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஓடைக்கு தண்ணீர் குடிக்க சென்ற யானை அடி சறுக்கி எழ முடியாமல் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவித்தனர்.
பிடிபட்ட இந்த யானை சத்தியமங்கலம் வனப்பகுதியில் விடப்பட்டு முதுமலை வனப்பகுதியில் உலாவியுள்ளது. அப்படி என்றால் டெரைன் எனப்படும் இந்த பகுதியை புதிய யானைக்கு பழக்கம் இல்லாமல் இருப்பதும் உயிரிழப்புக்கு ஒரு காரணமாகவே கருதப்படுகிறது என வன ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது முகநூலில், நாடு விட்டு நாடு செல்லும் மனிதர்களைப் போல வாழ வழி தேடி, காடு விட்டுக் காடு சென்றும், வாழ முடியாமல் தன் வாழ்வைப் பாதியிலேயே முடித்துக்கொண்ட அதன் மரணம் இயற்கை மரணம் என்ற கணக்கில் சேர்ந்துவிடும்.
ஆனால், மரணிக்கும் ஒவ்வொரு யானையின் உயிர்வலியும் நம் நெஞ்சை எப்போதும் துளைத்துக் கொண்டுதான் இருக்கும், என்று பதிவிட்டுள்ளார்.