கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தொழிற்சங்க கூட்டுக் குழுவின் கூட்டம் குழுத்தலைவர் வால்பாறை அமீது தலைமையிலும் எல்.பி.எப் சௌந்தரபாண்டியன் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை ஒட்டி தோட்டத் தொழிலாளர்கள் எஸ்டேட் பகுதிக்கு வானங்களில் வரும் காய்கறி சமையலுக்குத் தேவையான பொருட்களை வாங்க ஏதுவாக சனிக்கிழமைகளில் பன்னிரண்டு மணிக்கு பணிகளை முடித்துவிட்டு அனுப்ப வேண்டும், உடல்நலக்குறைவு ஏற்படும் தொழிலாளர்கள் தற்போதைய சூழலில் பொள்ளாச்சி கோவை மருத்துவமனைக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தோட்ட நிர்வாகங்கள் மருத்துவமனைகளை மேம்படுத்தி சிகிச்சை அளிக்க முன்வர வேண்டும், குடியிருப்பு பகுதிகளை ஒட்டியுள்ள புதர்களை அகற்ற வேண்டும், அட்டகட்டி சோதனை மையத்தில் தீவிர சோதனைகளை ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், தமிழக தோட்ட அதிபர்கள் சங்கம், ஆனைமலை தோட்டா அதிபர்கள் சங்கம் இதுகுறித்து தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.
இந்த கூட்டத்தில் தொழிற்சங்க தலைவர்கள் வால்பாறை அமீது, கருப்பையா ஐஎன்டியூசி மோகன்ஏஐடியுசி, ஏஐடியுசி வீரமணி, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.