பொள்ளாச்சி அருகே  முள்ளம்பன்றியை வேட்டையாடிய 4 நபர்களிடம் ரூபாய் 52,000 அபராதம் விதித்த வனத்துறையினர்

பொள்ளாச்சி அருகே  முள்ளம்பன்றியை வேட்டையாடிய 4 நபர்களிடம் ரூபாய் 52,000 அபராதம் விதித்த வனத்துறையினர்

கோவை: பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரகம் சேத்துமடை, மாங்கரை வனப்பகுதியில் முயல், மான், முள்ளம்பன்றி, உடும்பு என ஏராளமான சிறு வன உயிர்கள் அதிக அளவில் உள்ளன.

அங்குள்ள சிலர் இந்த வனவிலங்குகளை வேட்டையாடுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின்

பேரில், வனத்துறையின் கள இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின்படி வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில் வனத்துறையினர் வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, வனத்துறையினர் ரோந்து சென்ற போது சந்தேகத்துக்கிடமான 4 பேரை விசாரணை செய்தனர். அப்போது, விசாரணையில் அவர்கள்மயிலாடுதுறையை சேர்ந்த ஜெயபால், கனகராஜ்,

கார்த்திகுமார் எனவும், முள்ளம் பன்றியை வேட்டையாடியதும்தெரியவந்தது.

இதையடுத்து வேட்டை ஆடியமுள்ளம்பன்றியை கைப்பற்றிய வனத்துறையினர், நான்கு நபர்களையும் ஆனைமலை வனத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்தனர். விசாரனையில் முள்ளம்பன்றியை வேட்டையாடிய குற்றத்திற்காக, நபருக்கு ரூ 13,000 என 52,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.



மேலும், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வேட்டையாடினால் கடும் தண்டனை விதிக்கப்படும் என வனச்சரகர் காசிலிங்கம் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...