கோவை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான பயணிகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட கொரோனா பரிசோதனை மீண்டும் துவக்கம்..!

கோவை: கோவை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான பயணிகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வந்த கொரோனா பரிசோதனைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் பரிசோதனைகள் துவக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான பயணிகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வந்த கொரோனா பரிசோதனைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் பரிசோதனைகள் துவக்கப்பட்டுள்ளது.

உள் நாட்டு விமான பயணிகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வந்த கொரோனா பரிசோதனைகள் சமீபத்தில் நிறுத்தப்பட்டடன. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நோய் தொற்று அதிகம் உள்ள ஊர்களில் இருந்து வரும் நபர்களுக்கு தொற்று உள்ளதா என கண்டரியாமல் அவர்களை ஊருக்குள் அனுமதிப்பது பெரும் ஆபத்தை விளைவிக்கும் என பொது மக்கள் அச்சம் தெரிவித்தனர்.

கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவை மீண்டும் மே மாதம் துவக்கப்பட்ட நாளிலிருந்தே கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. நாள் ஒன்றிற்கு 500 பயணிகள் முதல் விமானம் மூலம் சென்னை, மும்பை, குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வருகின்றனர்.

அப்படி வரும், வெளிநாட்டு மற்றும்.உள்நாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை விமான நிலையத்திலேயே செய்யப்பட்டு வந்தது. அவ்வாறு, பரிசோதனை மேற்கொண்டதில், சிலருக்கு தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சைக்கு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தனர்.

கடந்த மாதம் 1 ஆம் தேதி 140 ஆக இருந்த கொரோனா தொற்று இப்போது கோவையில் ஆயிரத்தை கடந்த நிலையில், தீடீரென உள் நாட்டு விமான பயணிகளுக்கு இனி கொரோனா பரிசோதனை விமான நிலையத்தில் செய்யப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டது.

மேலும், அவர்களை வீடுகளில் தனிமைபடுத்திக் கொள்ளவும், தனிமைப்படுத்தி இருக்கும் போது அறிகுறிகள் இருந்தால் கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டு வந்தனர். இப்படி, நோய் தொற்று அதிகம் உள்ள இடங்களில் இருந்து வருபவர்களுக்கு தொற்று உள்ளதா என பரிசோதனை செய்யாமல் அவர்களை தனிமைப்படுத்தி கொள்ள மட்டுமே சொல்வது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனிடையே, பரிசோதனை நிறுத்தப்பட்டு இருப்பதால் விமான பயணிகளின் மூலம் மேலும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்ற சூழல் நிலவி வந்த நிலையில், மீண்டும் உள்நாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை விமான நிலையத்திலேயே செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...