கோவை: கோவை மாவட்டத்தில் சாலை விபத்துக்களை தடுப்பதிலும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதிலும் தனி கவனம் செலுத்துபடும் என கோவை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக பதவியேற்ற அருளரசு ஐபிஎஸ் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மாவட்டத்தில் சாலை விபத்துக்களை தடுப்பதிலும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதிலும் தனி கவனம் செலுத்துபடும் என கோவை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக பதவியேற்ற அருளரசு ஐபிஎஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 59 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து கடந்த வாரம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதன்படி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சுஜித் குமார், ஐபிஎஸ் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து, நாமக்கல் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய அருளரசு, ஐபிஎஸ் கோவை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இதன்படி, இன்று பதவி ஏற்று, காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டு பதவியேற்ற அவருக்கு காவல்துறை அதிகாரிகள் மலர் கொத்து கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இதனை, தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில்:-
கோவை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக இன்று பொறுப்பேற்றுள்ளேன். கோவை ஒரு அமைதியான மாவட்டம்.இந்த மாவட்டத்தில் குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்", என்றார்.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் சாலை விபத்துக்களை தடுப்பதிலும் அதிக கவனம் செலுத்தப்படும். பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும், 9498122422 என்ற எண்ணில் என்னை தொடர்பு கொள்ளலாம். அனைத்து புகார்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்தார்.