உலக சாதனை புத்தகத்தில் இந்தியாவின் புலிகள் கணக்கெடுப்பு இடம்பெற்றது

கோவை: 2018 ஆம் ஆண்டின் இந்தியாவின், புலிகள் கணக்கெடுப்பு, உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.


கோவை: 2018 ஆம் ஆண்டின் இந்தியாவின், புலிகள் கணக்கெடுப்பு, உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

மிகவும் கம்பீரமான, காடுகளில் சிம்ம சொப்பனமாக விளங்கும் புலிகளின் கணக்கெடுப்பு இந்திய காடுகளில் நெடுங்காலமாக நடைபெற்று வருகிறது.

கேமிரா மூலம் வனவிலங்கு கணக்கெடுப்பு உலக அரங்கில் கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளது.மேலும், அதிகளவு கேமிராக்களை பொறுத்தியதே இந்த சாதனைக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

உலக கணக்கில் 70 சதவீத புலிகள் இந்தியாவில் தான் உள்ளது. இந்திய அரசு 2006 லிருந்து நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை புலிகள் கணக்கெடுப்பை, வன உயிரின நிறுவன தொழில்நுட்பத்தோடு தேசிய புலிகள் அமைப்பு மேற்கொண்டு வருகிறது.

நாடு முழுவதும், புலிகள் நடமாட்டம் உள்ள காடுகளில் மோஷன் சென்சார்கள் பொருத்தப்பட்ட கேமராக்கள் 26,838 இடங்களில் பொருத்தியுள்ளனர். விலங்குகள் கடந்து செல்லும் போது புகைப்படங்கள் எடுப்பதன் மூலம் 3,48,58,623 வனவிலங்குகள் அதில் பதிவாகியுள்ளது.

அதில், 76,651 புலிகள் மற்றும் 51,777 சிறுத்தைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், 2014 ல் 2,226 ஆக உள்ள புலிகளின் எண்ணிக்கை 2018 ல் 2,927 ஆக அதிகரித்துள்ளது. மொத்த எண்ணிக்கையான 2,967 புலிகளில் 2,461 புலிகள் கேமரா மூலம் எடுக்கப்பட்டன. அதாவது அவை, மொத்த கணக்கில் 83 சதவீதம் ஆகும்.

தமிழகத்தை பொறுத்தவரை அடர் வனமாக இருப்பதால் புலிகள் அரிதாகவே காணப்படுகிறது. அதற்கு பெரிதும் உதவது மறைமுக கணக்கெடுப்பு மட்டுமே. புலியின் எச்சம், கால் தடங்கள், இரையில் உள்ள பற்கூர்மை, மரங்களில் உள்ள நகங்களின் அழுத்தம் போன்றவற்றின் மூலமாக கணக்கிடப்படுகிறது.

இது மட்டுமல்லாமல் அதி நவீன கேமிரா ட்ராப்பிங் மூலம் புலிகளின் எண்ணிக்கை,வயது,பாலினம் போன்றவற்றை அறிய முடிகிறது.இதன் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்கள் தரவுகளாக வெளி வர 6 மாதங்கள் ஆகின்றது.

இந்த முறை உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்று உலக அரங்கில் இந்தியா வெற்றியடைந்துள்ளதாக மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

https://guinnessworldrecords.com/world-records/601784-largest-camera-trap-wildlife-survey

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...