கோவை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்த நிலையில், ஜூலை மாதம் உள்ள அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், கடந்த 5 ஆம் தேதி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையடுத்து இன்று இரண்டாம் ஞாயிற்று கிழமையான இன்று, மீண்டும் அமலுக்கு வந்து முழு ஊரடங்கு.
குறிப்பாக, திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. மக்கள் நடமாடமின்றி நகரின் முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகள் வாகன போக்குவரத்தின்மையால் வெறிச்சோடி காணப்பட்டது.
திருப்பூரில் 294 ஆகவும், கோவையில் 1000 இக்கு மேல் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் மக்கள் அனைவரும் மதித்து வீடுகளை விட்டு வராமல் கடந்த வாரம் ஒத்துழைத்தது போல் இந்த வாரமும் கடைபிடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கை மீறி, பொறுப்பற்ற முறையில் சாக்கு போக்கு கூறி வெளியில் சுற்றிதிறிந்த வாகன ஓட்டிகளை போலீசார் பிடித்து, அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்தனர்.