கோவை வருமான வரித்துறை ஆணையாளருக்கு கொரோனா தொற்று உறுதி; தனியார் மருத்துவமனையில் அனுமதி

கோவை மற்றும் மதுரை மண்டல வருமான வரித்துறை ஆணையாளர், ராஜீவ் விஜய் நபாருக்கு கொரோனா தொற்று

கோவை: கோவை மற்றும் மதுரை மண்டல வருமான வரித்துறை ஆணையாளர், ராஜீவ் விஜய் நபாருக்கு கொரோனா தொற்று

உறுதியானதை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக

அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை மற்றும் மதுரை மண்டல வருமான வரித்துறை ஆணையர் ராஜீவ் விஜய்நபார், சமீபத்தில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து அலுவலக பணிகளை மேற்கொண்டார்.

கடந்த வியாழக்கிழமை கோவைமண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 16 அதிகாரிகளுடன், கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை அவரது உடல் நிலை பாதிக்கப்படவே பீளமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு

அவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து, ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட 16 வருமான வரித்துறை அதிகாரிகளையும் தனிமைபடுத்தி கொள்ளுமாறு சுகாதாரதுறையனர்அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட 16 வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பபட்டுள்ளது.

மேலும், கோவை மண்டல வருமான வரித்துறை அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கபட்டு அப்பகுதியை மாநகராட்சி ஊழியர்கள் மூலம்சுத்தம் செய்யப்பட்டது.

இந்நிலையில், அவரது குடும்பத்தில் உள்ள மூவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபட உள்ளதாக கூறப்படுகிறது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...