திருப்பூரில் இன்று 6 பேருக்கு கொரோனா பாதிப்பு; 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்
திருப்பூர்: திருப்பூரில் கடந்த சில வாரங்களில் 10 க்கும் மேற்பட்டோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், அதன் பாதிப்பு குறைந்து இன்று 6 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 1.3 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரானாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த சில வாரங்களாக பாதிப்பின் எண்ணிக்கை 10 க்கும் மேல் இருந்த நிலையில், அதன் பாதிப்பு இன்று குறைய தொடங்கியுள்ளது.
மாவட்டத்தில் இதுவரை 288 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 6 பேருக்கு தொற்று உறுதியாகி பாதிப்பின் எண்ணிக்கை 294 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூரில் புதிதாக 203 பேர் என மொத்தம் 2906 பேர்வீட்டுக்கண்காணிப்பில் உள்ளனர். இதோடு 379 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலை நிறைவு செய்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இன்று 604 பேருக்கு கொரோனாமாதிரி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது 125 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக, மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.