பொள்ளாச்சி - கோவை சாலையில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய காவல்துறையினர்!

கோவை: பொள்ளாச்சி - கோவை சாலையில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் மக்களுக்கு போலீசார் நிவாரணப் பொருட்கள் வழங்கினர்.

கோவை: பொள்ளாச்சி - கோவை சாலையில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் மக்களுக்கு போலீசார் நிவாரணப் பொருட்கள் வழங்கினர்.



கடந்த மூன்று மாதங்களாக கொரோனா தொற்று காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் பொள்ளாச்சி - கோவை சாலையில் வசித்து வருகின்றனர்.

இவர்கள் தினம்தோறும் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஊசி, பாசி போன்ற பொருள்களை விற்று ஜீவனம் செய்து வந்தனர். இந்நிலையில் ஊரடங்கு மற்றும் கடும் கட்டுப்பாடுகளால் இவர்கள் மற்ற பகுதிகளுக்கு சென்று பொருட்களை விற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத்திடம் கோரிக்கை விடுத்தனர். அதை தொடர்ந்து அவர்களுக்கு தேவையான அரிசி, காய்கறிகள், பருப்பு, எண்ணெய் போன்ற நிவாரணப் பொருட்களை கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் படி பொள்ளாச்சி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவக்குமார், நரிக்குறவர் குடும்பங்களை சந்தித்து நிவாரணப் பொருட்களை நேரில் வழங்கினார்.

பின்னர் பொதுமக்களிடம் அவர் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. ஆதலால் நீங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். மேலும் காவல்துறை எல்லா வகை உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறது. காவல்துறை உங்கள் நண்பன் என கூறினார். இதில் சிறப்பு உதவி ஆய்வாளர் மைக்கேல் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...