கோவையில் சிஜிஎச்எஸ் மருந்தக சேவையை விரைந்து துவக்கிட வேண்டும் - பி.ஆர்.நடராஜன் எம்பி வலியுறுத்தல்

கோவை: மத்திய அரசு அதிகாரிகள் பயன்பெறும் சிஜிஎச்எஸ் மருந்தக சேவைக்கான மையத்தை கோவையில் விரைவில் துவக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறைக்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தி உள்ளார்.

கோவை: மத்திய அரசு அதிகாரிகள் பயன்பெறும் சிஜிஎச்எஸ் மருந்தக சேவைக்கான மையத்தை கோவையில் விரைவில் துவக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறைக்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

மத்திய அரசின் சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் சிஜிஎச்எஸ் என்கிற மருந்தகம் மற்றும் மருத்துவர்கள் உள்ளடக்கிய மருத்துவ மையம் செயல்பட்டு வருகிறது. இதில் மத்திய அரசில் பணிபுரியும் அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் முன்னாள், இன்னாள் எம்பிக்கள் இந்த மருந்தகத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

காப்பீட்டுத் திட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இச்சேவை மாநில தலைநகரங்களை மையப்படுத்தியே உள்ளது. தமிழகத்தில் சென்னையில் மட்டுமே இந்த மருந்தகம் உள்ளது. இதன் காரணமாக கோவை உள்ளிட்ட பிற மாவட்டத்தில் உள்ள பயனாளிகள் இச்சேவையின் முழு பயனை அடையமுடியாமல் உள்ளது.

இதனையடுத்து, கோவையில் இந்த சிஜிஎச்எஸ் மருந்தக சேவையை துவக்க வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் தொடர் முயற்சியை மேற்கொண்டு வந்தேன். இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் மத்திய சுகாதாரத்துறைக்கு கொங்கு மண்டலத்திற்குட்பட்ட எம்பிக்கள் மற்றும் கேரள மாநில பாலக்காடு எம்பி ஆகிய ஏழு எம்பிக்கள் கையெழுத்திட்டு மனு அனுப்பினோம். கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து மத்திய சுகாதாரத்துறையும் கோவை மற்றும் மதுரையில் இந்த சிஜிஎச்எஸ் மருந்தகம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது. 

இதனை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையிலும் இதர எம்பிக்களின் சார்பிலும் வரவேற்வேக்கிறேன். விரைவில் சிஜிஎச்எஸ் மருந்தகம் அமைத்து நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...