அமெரிக்க ரோட்டரி பவுண்டேஷன் சார்பில் வழங்கிய பால் ஹாரிஸ் பெல்லோ விருதுக்கு தமிழக முதலமைச்சர் தகுதியானவர் - சி.பி.ராதாகிருஷ்ணன்

திருப்பூர்: தமிழக முதலமைச்சர் செய்த பணிக்குதான் அவருக்கு பால் ஹாரிஸ் பெல்லோ விருது வழங்கப்படுவதாகவும் அதற்கு அவர் தகுதியானவர் என திருப்பூரில் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருப்பூர்: தமிழக முதலமைச்சர் செய்த பணிக்குதான் அவருக்கு பால் ஹாரிஸ் பெல்லோ விருது வழங்கப்படுவதாகவும் அதற்கு அவர் தகுதியானவர் என திருப்பூரில் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் நினைவு நாளை முன்னிட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக மூத்த நிர்வாகி சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். 



அப்போது அவர் பேசுகையில், தமிழக முதல்வருக்கு அமெரிக்க ரோட்டரி பவுண்டேஷன் சார்பில் குடிநீர், சுகாதாரம், சுற்றுச்சூழல், உலக சமாதானம் உள்ளிட்ட துறைகளில் சிறந்தவர்களுக்கு வழங்கப்படும் பால் ஹாரிஸ் பெல்லோ என்ற விருது வழங்க தேர்வாகி உள்ளார். அவர் அதற்கு தகுதியானவர் என தெரிவித்தார். 

மேலும், தமிழகத்தில் கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். தற்போது இந்திய அளவில் கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் பிரதமர் மோடி என்றார். அந்த அளவிற்கு ஏராளமான நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இதுவரை இல்லாத வகையில் மத்திய அரசு உத்தரவாதத்தைக் கொடுத்து சிறு, குறு தொழில்களுக்கு 20 சதவீத கடன் வழங்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளார். 

அதேபோல விவசாயிகளின் நிலை, முன் எப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பானதாக மாற்றப்பட்டிருக்கிறது. புதிய நம்பிக்கையை உருவாக்குபவராக பிரதமர் மோடி திகழ்ந்து வருகிறார். தமிழகத்தில் எதிர் கட்சிகள் எதிரி கட்சியினராக இல்லாமல் ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்பவராக விளங்க வேண்டும், அரசின் முயற்சிக்கு மாநில அரசுகள், எதிர்கட்சிகள், ஊடகங்கள் என அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார். 

மேலும், தமிழகத்தில் 1 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு வேதனை அளிக்கிறது. இதில் யாரையும் குறை சொல்ல முடியாது. சுகாதார அமைச்சர் முதல் கடைநிலை பணியாளர் வரை அனைவரும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பலரும் மக்களுக்கு செய்த உதவிக்கு சாட்சி தான் பல அமைச்சர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று அவர் கூறினார். 

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...