திருப்பூர்: திருப்பூரில் 24 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டநிலையில் அவர் வசித்த பகுதியில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட சூசையாபுரம் பகுதியில் வசித்து வந்த 24 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நேற்றைய தினம் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, அவர் சிகிச்சைக்காக திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும், அவர் இருந்த பகுதி முழுவதும் இன்று கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு, அவரோடு தொடர்பில் இருந்தவர்கள் அனைவருக்கும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னிலையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.