நீலகிரி: கூடலூரில் இளம்பெண் காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், காவல் நிலையம் அருகில் இருந்த சார்பதிவாளர் அலுவலகம் மூடப்பட்டது. மேலும் காவல்துறையில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் 23 வயது பெண் காவலர் ஒருவருக்கு காெரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் ஊட்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இவர் கடந்த 4ம் தேதி பணி நிமித்தம் கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளார். ஆறாம் தேதி இவருக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் ஒன்பதாம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவர் வசித்த வீடு மற்றும் அங்குள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் இப்பகுதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகம், கூட்டுறவு வங்கி ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. மேலும் இப்பெண் காவலருடன் தங்கியிருந்த இருவர் உள்ளிட்ட அவருடன் நேரடி தொடர்பில் இருந்த அனைத்து காவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதேபோல், இங்குள்ள தனியார் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற மேல் கூடலூர் கேகே நகர் பகுதியில் வசித்த 65 வயது முதியவர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக நேற்று முன்தினம் அதிகாலை கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
இதன் காரணமாக அவருக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகள் வெளியேற்றப்பட்டு மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டது. அங்கு பணிபுரிந்த ஊழியர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கும் தற்போது மருத்துவத் துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கூடலூர் பந்தலூர் பகுதியில் இதுவரை ஏழு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்து வருகிறது. வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் வெளி மாநிலங்களுக்கு செல்லும் காய்கறி மற்றும் சரக்கு லாரிகளில் பயணிகளை ஏற்றி வருவதாக புகார்கள் எழுந்ததால், கூடலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் ஆர்டிஓ ராஜ்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. லாரி ஓட்டுநர் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் சரக்கு லாரிகளில் ஓட்டுநர், உதவியாளர் தவிர வேறு நபர்கள் பயணம் செய்ய அனுமதிக்கக் கூடாது என்றும், அவ்வாறு பயணிகளை ஏற்றி வந்தால் லாரி பறிமுதல் செய்யப்படும் என்பதால் இந்த விதிமுறையை லாரி ஓட்டுநர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழப்பு குறித்து மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை இது வரை வெளியிடவில்லை. இதனால் மக்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது.