திருப்பூர்: திருப்பூரில் உதவி காவல் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

திருப்பூர் வீரபாண்டி காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் கடந்த வாரம் விடுமுறை காரணமாக சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு சென்று கடந்த 3 நாட்களுக்கு முன் திருப்பூர் வந்த நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், பரிசோதனை முடிவுகள் இன்று வந்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, வீரபாண்டி காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, கிருமி நாசினி மூலம் சுத்திகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.