கோவை: கோவை உக்கடம் அருகே பாதாள சாக்கடை குழாய் உடைந்து சாலையில் ஆறுபோல் ஓடும் கழிவு நீரால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவையில் போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் விதமாக பல்வேறு இடங்களில் மேம்பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதில் உக்கடம்- ஆத்துப்பாலம் மேம்பால பணிகள் 60 சதவீதம் பணிகள் முடிவடைந்த நிலையில் தொடர்ந்து பாலம் கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மேம்பாலப் பணி நடைபெறும் உக்கடம் பகுதியில் பாதாள சாக்கடைக்கு அமைத்துள்ள கழிவுநீர் குழாய் உடைந்து சாலையில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கொரோனா தொற்று கோவையில் தற்போது வேகமாக பரவி வரும் நிலையில் கழிவுநீரால் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள் உடைபட்ட பாதாள சாக்கடை குழாயை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.