கோவை: உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறுதி மொழி ஏற்கப்பட்டது.

உலக மக்கள் தொகை தினம் இன்று கொண்டாடப்படுவதைத் தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறுதி மொழி ஏற்கப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட வருவாய் துறை அதிகாரி ராமதுரை முருகன் தலைமையில் கோவை மாவட்ட மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் குடும்பல நலத்துறை சேர்ந்து இந்த உறுதி மொழி ஏற்கப்பட்டது.
இந்த நிகழ்வின் போது, 20க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி உறுதிமொழி ஏற்றனர்.
தன்னம்பிக்கையும், தற்சார்பும் கொண்ட நம் நாட்டு மக்களுக்கு எந்த நெருக்கடியான சூழலிலும் குடும்ப நல திட்ட சேவைகளை செய்ய உறுதி செய்வோம் என்ற மையக்கருத்தை முன்வைத்து உறுதி மொழி ஏற்றனர்.