கேரளாவில் நடைபெற்ற 10ம் வகுப்புத் தேர்வில் பொள்ளாச்சி பழங்குடியின மாணவி ஏ ப்ளஸ் மதிப்பீடு பெற்று தேர்ச்சி..! திமுக தலைவர் வாழ்த்து தெரிவித்து ரூ.1 லட்சம் உதவித்தொகை

கோவை: கேரளாவில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் ஏ ப்ளஸ் மதிப்பீடு பெற்று தேர்ச்சி பெற்ற பொள்ளாச்சி அருகே பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீதேவிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் வாழ்த்து தெரிவித்து திமுக சார்பில் ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது.

கோவை: கேரளாவில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் ஏ ப்ளஸ் மதிப்பீடு பெற்று தேர்ச்சி பெற்ற பொள்ளாச்சி அருகே பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீதேவிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் வாழ்த்து தெரிவித்து திமுக சார்பில் ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது. 

பொள்ளாச்சி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் பூச்சகொட்டாம்பாறை எனும் பழங்குடியினர் குடியிருப்பு உள்ளது. இங்கு பழங்குடி இனத்தை சாா்ந்த முதுவா் இன மக்கள் வசித்து வருகின்றனா்.

இந்த வனகிராமத்தில் வாழும் செல்லமுத்து என்பவரின் மகள் ஸ்ரீதேவி தனது பள்ளி படிப்பை கேரள மாநிலம் சாலக்குடியில் விடுதியில் தங்கி படித்து வந்தார். தற்போது 10ம் வகுப்பு தோ்வு எழுதிய ஸ்ரீதேவி A+ கிரேடு பெற்று தமிழகம் மற்றும் அப்பழங்குடி இனத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

பழங்குடி இனத்தில் பெண்கள் யாரும் வெளி ஆட்களை பாா்க்கவோ, ஆண்களிடம் பேசுவதற்கோ முன்னோர்கள் அனுமதிப்பதில்லை. இக்கிராமத்தில் வாழும் பெரியவா்களின் எதிா்ப்பை மீறி தனது மகளை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்த தனது தந்தை செல்லமுத்துவுக்கு தற்போது அதிக மதிப்ணெ்களை பெற்று பழங்குடி இனத்தில் முதல் பெண்ணாக 10ம் வகுப்பு தோ்ச்சி பெற்றுள்ள ஸ்ரீதேவியால் அக்கிராமத்தினா் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 



இந்த நிலையில், இச்செய்தி அறிந்த திமுக தலைவர் ஸ்டாலின் அவரது உத்தரவின் பேரில் முன்னாள் அமைச்சரும் கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான மு.பெ. சாமிநாதன், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம் கிருஷ்ணன், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன், அர்த்தனாரி பாளையம் ஊராட்சி தலைவர் குலோத்துங்கன் ஆகியோர் இன்று ஸ்ரீதேவி வீட்டிற்கு நேரில் சென்று சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். மேலும், திமுக தலைவர் ஸ்ரீதேவிக்கு காணொளி காட்சி மூலமாக வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு கழகத்தின் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது. .

இதையடுத்து, மாணவி ஸ்ரீதேவி பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில், திமுக தலைவர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் பேசியது, எங்களுக்கு ஊக்கம் அளிப்பதாகவும் இதற்காக திமுக தலைவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் அளித்த நிதியுதவி எங்கள் குடும்பத்திற்கு பேருதவியாக இருக்கும் என்றார். 

அடுத்தபடியாக அறிவியல் துறையை தேர்ந்தெடுத்து மருத்துவராகவும், மருத்துவரான பிறகு வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு மருத்துவ சேவை செய்வதே தனது லட்சியம் என்று அந்த மாணவி தெரிவித்தார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக ஸ்ரீதேவிக்கு பாராட்டு தெரிவித்தது பழங்குடியின மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...