கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் நகராட்சி சார்பில் கொரோனா தடுப்பு பணியில் முன் களத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்கிடவும் புத்துணர்ச்சி அளித்திடவும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

வால்பாறையில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமில் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்து முன்கள பணியாளர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர் குமர குருபரன் கலந்து கொண்டு பணியாளர்களுக்கு மன அழுத்தத்தை போக்கிட சிறுகதைகள் பாடல்கள் மற்றும் மூச்சுப்பயிற்சி அளித்தார்.
இதனை தொடர்ந்து, இசை நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பணியாளர்களும் கலந்து கொண்டு நடனமாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து பணியாளர்களின் சேவையை பாராட்டி அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த முகாமில் நகராட்சி உதவி இயக்குநர் குமாரவேல், நகராட்சிகளின் ஆய்வாளர் மனோகரன், நகராட்சி ஆணையாளர் பவன்ராஜ், காவல் ஆய்வாளர் மகேஸ்வரி மற்றும் கொரோனா முன் களப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.