கோவை: ஆன்லைனில் பாடம் நடத்தினாலும் பெற்றோர்கள் கட்டணம் செலுத்த மறுப்பதாகக் கூறி ஆசிரியர் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நலசங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை: ஆன்லைனில் பாடம் நடத்தினாலும் பெற்றோர்கள் கட்டணம் கட்ட மறுப்பதாகக்கூறி ஆசிரியர் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நலசங்கத்தினர், இன்று கோவை இரத்தினபுரியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப் போவதால் பல தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில், பள்ளி கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு விதித்த தடை குறித்து நீதிமன்றத்தில் தனியார் பள்ளிகள் சங்கம் மனு அளித்தன. இதனையடுத்து, விசாரணையில் பெற்றோர்கள் தாமாக முன்வந்து கல்வி கட்டணத்தை வழங்கும் பட்சத்தில் கட்டணத்தை பள்ளிகள் வாங்க தடையில்லை எனவும் தவணை முறையில் பள்ளி கட்டணம் வசூலிக்கலாமா என்பதற்கு அரசின் அனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத்தியது.
மேலும், கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகள் சங்கத்திற்கு ஒதுக்கப்பட்டு உள்ள 248.76 கோடி ரூபாயை கொண்டு ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், பெற்றோர்கள் பாதிக்கப்படாதவாறு மூன்று தவணைகளாக பள்ளி கட்டணம் வசூலிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. ஆனால், கடந்த மார்ச் முதல் ஜூன் வரை சம்பளமில்லாமல் ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக, ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக அரசு, பள்ளி கட்டணத்தை பெற்றோர்களை செலுத்த ஆணையிடக்கோரி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தில் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நலச்சங்கத்தினர் ஈடுபட்டனர்.