கோவை: கோவை கொடிசியா வளாகத்தில் பாதுகாப்பு கவச உடைகளை ( PPE kit) நாய் இழுத்துச் செல்லும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை: கோவை கொடிசியா வளாகத்தில் பாதுகாப்பு கவச உடை ( PPE kit) ஒன்றை நாய் இழுத்துச் செல்லும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை கொடிசியா வளாகத்தில் 400 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் கடந்த திங்கட்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்தது. தற்போது வரை மேற்பட்ட கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட அறிகுறியற்ற கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்த மையத்தில் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக மருத்துவர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் பயன்படுத்தும் சுய பாதுகாப்பு கவச உடையை நாய் ஒன்று கவ்வி கொண்டு செல்லும் புகைப்படம், மக்களிடையே அங்கு கடைபிடிக்கப்படும் விதிமுறைகள் குறித்து சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இதனையடுத்து, கொரோனா வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டதால், இந்த உடைகளில் இருக்கும் கிருமிகள் மற்றவர்களுக்கு பரவ வாய்ப்புகள் ஏற்படும் எனவும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் பயன்படுத்தும் சுய பாதுகாப்பு கவசங்களை உரிய வழிகாட்டுதல்படி அழிக்க தனியாக ஊழியர்களை நியமித்து மாவட்ட சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.