கோவை: கோவையில் கள்ளக்காதல் பிரச்சனையில் மனைவி மற்றும் மாமியார் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த சம்பவத்தில் குற்றவாளியின் மனைவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை புலியகுளம் அருகே உள்ள அம்மன் குளம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சார்ந்தவர் தங்கராஜ். 56 வயதான அவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்தார். அவரது மனைவி கமலம்மாள்(51) மற்றும் மாமியார் காளியம்மாளுடன் வசித்து வருகிறார்.
குடிப்பழக்கத்திற்கு ஆளான தங்கராஜுக்கும் தனது மனைவியின் உறவினர் பெண் ஒருவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் பணிக்கு சென்று இரவில் மது போதையுடன் வீடு திரும்பிய தங்கராஜ், தனது மனைவி மற்றும் மாமியாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவர்களுடன் கை கலப்பிலும் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, மதுபோதையில் இருந்த தங்கராஜ் ஆத்திரமடைந்து, அருகிலிருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து, தனது மனைவி மீது ஊற்றி தீ வைத்தார். இதனால் வலியால் அலறித்துடித்த கமலாவை காப்பாற்ற அவரது தாயார் காளியம்மாள் முயன்றுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தங்கராஜ் காளியம்மாள் மீதும் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்தார்.
இதில் மனைவி மற்றும் மாமியாருக்கும் தீ காயம் ஏற்பட்டு கூச்சலிட சம்பவ இடத்திலிருந்து தங்கராஜ் தப்பி ஓடினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் கமலா மற்றும் காளியம்மாளை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், தங்கராஜின் மனைவி கமலா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் கமலாவின் தாய் காளியம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கொலை வழக்கு பதிவு செய்துள்ள ராமநாதபுரம் காவல் துறையினர், தப்பி ஓடிய தங்கராஜை கைது செய்து கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.