உதகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோம் மேட் சாக்லேட் என விளம்பரம் செய்த நிறுவனத்திற்கு சீல்!

நீலகிரி: உதகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்ற விளம்பரத்துடன் புதிய வகை ஹோம் மேட் சாக்லேட் உற்பத்தி செய்த பிரபல நிறுவனத்திற்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சீல் வைத்தனர்.

நீலகிரி: உதகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்ற விளம்பரத்துடன் புதிய வகை ஹோம் மேட் சாக்லேட் உற்பத்தி செய்த பிரபல நிறுவனத்திற்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சீல் வைத்தனர்.

சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களை கவரும் வகையில் பல சுவைகளில் உதகையில் ஹோம் மேட் சாக்லேட் தயாரிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் 100% சுற்றுலா பயணிகள் வருகை பாதிக்கப்பட்டது. இதனால் ஹோம் மேட் சாக்லேட் தொழில் கடும் சரிவை சந்தித்து வருகிறது.

இதனால் வழக்கமாக தயாரிக்கப்படும் ஹோம்மேட் சாக்லேட்க்கு பதிலாக தற்போது கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் புதிய ரக ஹோம் மேட் சாக்லேட் தயாரிக்கப்பட்டுள்ளதாக பாக்கெட்களின் மேல் பகுதியில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

கூடலூரில் உற்பத்தி செய்யப்படும் கொக்கோ மூலம் வெள்ளை சர்க்கரைக்குப் பதிலாக நாட்டுச்சர்க்கரை கலந்து, எந்த வித ரசாயன கலவை சேர்க்காமல், நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் ஹோம் மேட் சாக்லேட் தயாரிக்கப்படுகிறது என சொல்லப்பட்டது.



இது குறித்து தகவலறிந்த மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், இந்த நிறுவனத்தை ஆய்வு செய்தனர்.



இதில் அரசிடம் இருந்து எந்த விதமான அனுமதியும் பெறாமல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் நிறைந்த சாக்லெட் என்று விளம்பரப்படுத்தி விற்பனை செய்ததால் இந்த தொழிற்சாலைக்கு இன்று சீல் வைத்தனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...