சாத்தான்குளம் வழக்கு: பாடகி சுசித்திரா வெளியிட்ட வீடியோ உண்மைத் தன்மையற்றது; யாரும் பகிர வேண்டாம் என சிபிசிஐடி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
கோவை: சாத்தான்குளம் தந்தை - மகன் இருவரும் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து பிரபல பின்னணி பாடகி சுசித்தரா ஒரு வீடியோவை ஆங்கிலத்தில் வெளியிட்டிருந்தார்.
தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான மக்களால் சமூக வலயதலங்களில் பகிரப்பட்டு வந்த அந்த காணொளி முற்றிலும் உண்மைத்தன்மையற்றது என்று சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக காவல்துறை சார்பில் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது :-
தென்னிந்திய பாடகி சுசித்தரா அவர்களால் சமீபத்தில் வெளியிடப்பட்ட சாத்தான்குளம் நிகழ்வு குறித்த காணொளி முற்றிலும் உண்மைத்தன்மையற்றது.
மேலும், இது போன்ற காணொளிகளை வெளியிடுவது வழக்கின் விசாரணையையும் புலனாய்வையும் பாதிக்கும் என மாண்புமிகு சென்னை
உயர்நீதிமன்றம் வழிகாட்டியுள்ளது.
எனவே, பொதுமக்கள் இத்தகைய காணொளிகளை நம்ப வேண்டாம் என காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இந்த பதிவினை அனைவரிடமும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.