திருப்பூரில் 288 ஆக உயர்ந்த கொரோனா பாதிப்பு; 97 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு

திருப்பூர்: திருப்பூரில் இன்று 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதால், மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது.

திருப்பூர்: திருப்பூரில் இன்று 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதால், மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது.

இதை தொடர்ந்து, 97 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக இன்று ஆட்சியர் அறிவித்து அங்கு கூடுதல் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி அறிவுறுத்தியுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை வீரபாண்டியில் 70 வயதான முதியவர், வேலம்பாளையத்தில் 18 வயதான சிறுமி, அமர்ஜோதி நகரில் 38 வயதான ஆண் உள்பட பல்வேறு பகுதிகளில் மொத்தம் இன்று மட்டும் 24 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதால், பாதிப்பின் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது.

திருப்பூரில் புதிதாக 230 பேர் என மொத்தம் 3082 பேர் வீட்டுக்கண்காணிப்பில் உள்ளனர். இதோடு 307 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலை நிறைவு செய்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர், விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மேலும், இன்று 801 பேருக்கு கொரோனா மாதிரி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

திருப்பூரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், முக கவசம் அணியாமல் பொதுவெளியில் இருந்த 618 நபர்களிடமிருந்து, ரூ 81,400/- அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...