கோவை: தமிழக கேரள எல்லையான வாளையார் சோதனை சாவடி அருகே முறையான ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 46 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்த போலீசார் இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை ஈச்சனாரி பகுதியைச் சேர்ந்த சம்பத்குமார் (42) மற்றும் கெம்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருக குருசாமி. இந்நிலையில், வாளையார் சோதனை சாவடி அருகே கேரள போதை தடுப்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, சம்பத்குமார் ஓட்டி வந்த சரக்கு வாகனத்தின் சீட்டின் அடியில் 16 லட்சம் ரூபாய் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதேசமயம், பாலமுருக குருசாமியின் வாகனத்தை சோதனையிட்ட போது, பணம் எதுவும் சிக்கவில்லை.
ஆனால், சந்தேகமடைந்த போலீசார் அவரது சட்டை வித்தியாசமாக இருப்பதை கண்டு, அவரை சோதனை செய்தபோது சட்டையில் பல்வேறு பாக்கெட்டுகள் அமைத்து அதில் 30 லட்சம் ரூபாய் பணம் வைத்திருந்தது தெரிய வந்தது.
இது குறித்து இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, டிராக்டர் வாங்க திருச்சூர் செல்வதாக தெரிவித்துள்ளனர். ஆனால், இதற்கான எந்த ஆவணங்களும் இல்லாததால் கேரள போதை தடுப்பு போலீசார் இவர்கள் இருவரையும் வாளையார் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, அவர்கள் கட்டுகட்டாக வைத்திருந்த பணத்தை பறிமுதல் போலீசார், இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 6ம் தேதி வாளையார் சோதனை சாவடியில் 1.25 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இன்று மீண்டும் அதே பகுதியில் 46 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஒரு வார காலத்தில் சுமார் இரண்டு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், தமிழக கேரள எல்லையில் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.