திருப்பூர்: திருப்பூர் மாவட்ட பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை கிளை ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் கிளை அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை கிளையில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் கிளை அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் மாவட்ட முதன்மை கிளையில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், வங்கிக் கிளை முழுவதும் தற்காலிகமாக மூடப் போவதாக வங்கி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், இன்று வங்கி அடைக்கப்பட்டு கிருமி நாசினி மூலம் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதோடு வங்கியில் பணிபுரிந்த ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதனால், வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.