திருப்பூரில் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் தொந்தரவு செய்து வந்து நபரை திருப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், வீடியோ ஆதாரங்களை கைபற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூரில் ஒரு பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றி, அவரை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் தொந்தரவு செய்து வந்து நபரைதிருப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவரிடம் இருந்து வீடியோ ஆதாரங்களை கைபற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை சேர்ந்த மாது (41) கடந்த சில வருடங்களாக திருப்பூர் எம்.எஸ்.நகர் பகுதியில் தனது மனைவி மற்றும் 6 வயது பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், அதே பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வரும் இவர், அங்கு வேலை செய்து வரும் 24 வயது பெண் ஒருவரை காதலிப்பதாக நாடகமாடியுள்ளார். மேலும், அந்த பெண் தனியாக இருக்கும் போது அவரை நிர்வாணமாக வீடியோ மற்றும் போட்டோ எடுத்து வைத்து மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்ததால் மாது, அவரது சொந்த ஊரான சென்னிமலைக்கு குடும்பத்துடன் சென்று விட அந்த 24 வயது பெண் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார்.
ஆனாலும், தொடர்ந்து அந்த பெண்ணை தொந்தரவு செய்து வீடியோவை காட்டி மிரட்டியுள்ளார். இந்த நிலையில், அந்த பெண்ணிற்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்துள்ளனர்.
இதனையறிந்த, மாது அந்த மாப்பிள்ளைக்கு இந்த பெண்ணின் வீடியோ மற்றும் போட்டோவை அனுப்பி வைத்துள்ளார். தொடர்ந்து, அந்த பெண்ணின் போட்டோ மற்றும் வீடியோவை சமுக வலைதளத்திலும் பதிவேற்றம் செய்துள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண் திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
பாதிக்கபட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில், மாதுவை கைது செய்த போலீசார், போட்டோ மற்றும் வீடியோவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.