கோவை காந்திபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல நகைக்கடையில் பணிபுரியும் மேலும் 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

கோவை: கோவை காந்திபுரத்தில் செயல்பட்டு வரும் மலபார் என்ற நகைக்கடையில் பணிபுரியும் மேலும் 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை: கோவை காந்திபுரத்தில் செயல்பட்டு வரும் மலபார் தங்க மற்றும் வைர நகைக்கடையில் பணிபுரியும் மேலும் 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் என்ற பிரபல நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இங்கு பணியாற்றும் ஊழியர்கள் இருவருக்கு நேற்று கொரொனா தொற்று உறுதியானது. இதையடுத்து அந்த நகைக்கடை மூடப்பட்டது. மேலும், அப்பகுதி முழுவதும் தகடுகள் கொண்டு அடைக்கப்பட்டது.

இதனிடையே, அக்கடையில் பணியாற்றும் ஊழியர்கள் காந்திபுரம் 3வது வீதியில் உள்ள தங்கும் விடுதியில் இருந்த 42 பேருக்கு நேற்று மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் மேலும் 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், அந்த கடையில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.

இதேபோல, அப்பகுதியில் உள்ள ஆதித்யா ஆட்டோ மொபைல் ஸ்பேர்ஸ் கடையில் பணியாற்றிய ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதன் காரணமாக அப்பகுதி முழுவதும் 10 நாட்களுக்கு அடைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...