உதகையில் ரூ.447.32 கோடி மதிப்பில் மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவை காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார் முதலமைச்சர்!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் 40 ஏக்கர் பரப்பளவில் ரூ.447.32 கோடி மதிப்பில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான திட்டத்திற்கான அடிக்கல்லை இன்று முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் 40 ஏக்கர் பரப்பளவில் ரூ.447.32 கோடி மதிப்பில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு திட்டத்தினை தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் பணிகளை தொடங்கி வைத்தார்.



மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்ட மக்களின் கனவான மருத்துவக் கல்லூரிக்கு தமிழக முதலமைச்சர் இன்று சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

நீலகிரி மாவட்டம் சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கும் உதகைக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகை புரிவார்கள். மேலும் அதிகளவிலான ஏழை, எளிய தேயிலை தோட்ட பணியாளர்கள் மற்றும் விவசாயி தொழிலாளர்கள் நிறைந்த மாவட்டமாகும்.

மேலும், இம்மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளும், பொது மக்களும் தங்களின் மருத்துவ உயர் சிகிச்சை பெறுவதற்கும், மற்றும் மாணவ மாணவிகள் மருத்துவ கல்வியை பெறுவதற்கு, அண்டை மாவட்டமான கோவை அல்லது கேரளா செல்ல வேண்டிய நிலை நீடித்து வருகிறது.

இந்நிலையில், உதகை அருகே பிங்கர் போஸ்ட் பகுதியில் வனத்துறையிடமிருந்து 25 ஏக்கர் நிலமும் மற்றும் கால்நடை பராமரிப்பு துறையிடமிருந்து 15 ஏக்கர் நிலமும் பெறப்பட்டு, மொத்தம் 40 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 447 கோடியே 32 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்து, உயர் சிகிச்சை பெரும் வகையில் மருத்துவக் கல்லூரி அமைக்க முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி, இன்று தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் இன்று அந்த புதிய மருத்துவ கல்லூரிக்கான அடிக்கல்லை காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.

குறிப்பாக, அதிநவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய மருத்துவ கருவிகள், மருத்துவர்கள் குடியிருப்பு வளாகம், மாணவர்கள் கல்வி கற்கும் மருத்துவக் கல்லூரி வளாகம் மற்றும் 108 வாகனங்களுக்கான கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் இந்த புதிய மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை அமையவுள்ளது. இதற்கு நீலகிரி மாவட்ட பொது மக்கள் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...