நீலகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிடிக்கப்பட்டு முதுமலை வனப்பகுதிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த காட்டு யானை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மாதம் கிருஷ்ணகிரியில் உள்ள தேன்கணிக்கோட்டை பகுதியில் ஒற்றை யானை தாக்கி 3 விவசாயிகள் உயிரிழந்துள்ளதாகவும் அதை பிடிக்குமாறு வனத்துறைக்கு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், தேன்கணிக்கோட்டை வனப்பகுதியை ஒட்டியுள்ள திம்மசந்திரம், ஜார்கலட்டி, கலகோபசந்திரம் போன்ற கிராமங்களில், அந்த யானை சுற்றி வருவதாகவும் தகவல்கள் வெளியானது. 15 நாட்களுக்கு மேலாகியும் யானையை பிடிக்க முடியாத நிலையில் திம்மசந்திரம் மாகிடி கிராமம் பகுதியில், கடந்த மாதம் 11ம் தேதி மயக்க ஊசி போடப்பட்டு அந்த ஒற்றை யானை பிடிக்கப்பட்டது.

யானையை இடமாற்றம் செய்யும் பொருட்டு சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள தெங்குமரஹாடா மங்கால் வனச்சரகத்தில் விடப்பட்டது. தொடர்ந்து, சத்தியமங்கலம் புலிகள் காப்பகமும், முதுமலை புலிகள் காப்பகம் இணைந்து சிறப்பு குழுக்கள் அமைத்து அந்த யானையை கண்காணித்து வந்தனர். மேலும், இடம் மாற்றம் செய்யப்பட்ட யானை மனிதர்களை தாக்கக் கூடும் என்பதால் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று முதுமலை வனப்பகுதியில் உள்ள சீகூர் வனப்பகுதியில் அந்த யானை உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இறந்த யானையை உடற்கூறாய்வு செய்து உண்மையான அறிக்கை வனத்துறை வெளியிட வேண்டும் என்பதே வன ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
தொடர்ந்து கோவை, நீலகிரி பகுதியில் யானைகளின் இறப்பு விகிதம் அதிகமாகி கொண்டே வரும் நிலையில், யானைகளின் தொடர் இறப்பிற்கு உடல்நிலை சரியில்லை என்று வனத்துறையினர் பொதுவான காரணங்களை சொல்லி கடந்துவிட முடியாது அதற்கான சரியான காரணங்களை கண்டறிவதே சாலச்சிறந்தது, என வன ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.