கோவை: கோவை மாநகரின் முக்கிய நீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் 6.95 அடியாக உயர்ந்துள்ளது.
கோவை: கோவை மாநகரின் முக்கிய நீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் 6.95 அடியாக உயர்ந்துள்ளது.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளுக்கும் நுாற்றுக்கணக்கான வழியோர கிராமங்களுக்கும் சிறுவாணி நீர் விநியோகம் செய்யப்படுகிறது. சிறுவாணி அணையில் 22.47 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு நீரை தேக்க முடியும். 49.53 அடி உயரம் கொண்ட இந்த அணை கடல் மட்டத்தில் இருந்து 878.5 மீட்டர் உயரமுள்ளது. 650 மில்லியன் கன அடி நீர் கொள்ளவு கொண்டது.
கடந்த சில நாட்களுக்கு முன் அணையின் அளவு மழை பொழிவு குறைவாக உள்ள காரணத்தினால் குறைந்து வந்தது. அணையின் நீர்மட்டம் அளவு 3 அடிக்கும் குறைவாக காணப்பட்டது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பாடு அபாயம் நிலவி வந்தது.
ஆனால் கடந்த சில நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் 6.95 அடியாக உயர்ந்துள்ளது.
இனி வரும் நாட்களிலும் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், அணையின் நீர்மட்ட அளவு தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.