ஊரடங்கு விதிமுறை மீறல்களுக்கு யாரும் கைது செய்யப்படக்கூடாது - கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் டி ஐ ஜி உத்தரவு!

கோவை: கோவை மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து காவல் உதவி ஆய்வாளர்களுக்கான சிறப்பு கூட்டம் கோவை சரக காவல் துறை துணை தலைவர் நரேந்திரன் நாயர் இ.கா.ப. அவர்களால் பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து காவல் உதவி ஆய்வாளர்களுக்கான சிறப்பு கூட்டம் கோவை சரக காவல் துறை துணை தலைவர் நரேந்திரன் நாயர் இ.கா.ப. அவர்களால் பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், இ.கா.ப., கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில் காவல்துறையினர் பொதுமக்கள் நல்லுறவு பற்றியும், கைது செய்வது பற்றி உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பற்றியும், கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் கைது செய்யப்பட்ட நபர்களின் உரிமைகள் என்னென்ன? மற்றும் கைது செய்யப்பட்ட பின்பு கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றி விளக்கம் அளித்தார்கள்.

மேலும் தமிழக காவல் துறை இயக்குனர் அவர்களால் பிறப்பிக்கப்பட்ட பின்வரும் வழிமுறைகளை தவறாமல் கடைபிடிக்குமாறு வலியுறுத்தினார்.

1. ஊரடங்கு விதிமுறை மீறல் எப்போது, எங்கு நடந்தாலும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட வேண்டும். ஊரடங்கு விதிமுறை மீறல்களுக்கு யாரும் கைது செய்யப்படக்கூடாது.

2. கடுமையான / ஜாமீனில் வெளிவராத குற்றங்களுக்கு மட்டுமே கைது செய்யப்பட வேண்டும்.

3.காவல் பணியாளர்கள் பொதுமக்களிடம் ஆக்ரோஷமான நடத்தையை காட்டக்கூடாது, மக்களை தேவையில்லாமல் அடிக்கக்கூடாது.

4. பொது மக்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ள காவல்துறை முயற்சிக்க வேண்டும். சமூக காவல் முறைகள் பின்பற்றப்பட வேண்டும் மற்றும் பரவலான சமூக பங்களிப்பு கோரப்பட்டு சமூக காவல் பணியில் இணைக்கப்பட வேண்டும்.

5. காவலில் உள்ள குற்றவாளிகளைக் கையாளும் போது காவல் வன்முறைக்கு இடமில்லாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும்.

6. மாவட்ட தனிப்பிரிவு தரப்பில் தகவல் அளிப்பதில் எவ்விதமான தொய்வும் இருக்கக்கூடாது. அவர்கள் உடனுக்குடன் மூத்த அதிகாரிகளுக்கு தகவல்களை தெரிவிக்க வேண்டும்.

7. ஊரடங்கு அமலாக்கத்தின் போது பொதுமக்களிடம் மனிதாபிமான / இரக்கமுள்ள அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும். செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை தொடர்பாக அண்மையில் வெளியிடப்பட்ட பல்வேறு சுற்றறிக்கைகள் போன்றவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் தங்களது எல்லையில் பணிபுரியும் காவல் ஆளிநர்களுக்கு தினமும் தெரிவிக்க வேண்டும்.



மேலும், இது சம்மந்தமாக வழங்கப்படும் அறிவுரைகள் மற்றும் நெறிமுறைகளை அவர்தம் கையேட்டில் கட்டாயம் எழுதப்பட்டிருக்க வேண்டும். அதனை நிலைய பொறுப்பு அதிகாரி பார்வையிட்டு அதனை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...