கொரோனா தொற்று: கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கோவை, கரூர் மற்றும் திருப்பூரை சேர்ந்த மூவர் பலி

கோவை: கோவையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், மொத்த பாதிப்பு ஆயிரத்தை நெருங்குகிறது. அதேசமயம் கடந்த ஒரு வாரமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், மொத்த பாதிப்பு ஆயிரத்தை நெருங்குகிறது. அதேசமயம் கடந்த ஒரு வாரமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இன்று கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா பாதித்த கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த 80 வயது முதியவர் உயிரிழந்தார். கொரோனா தொற்று பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் 18 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றிரவு ஆபத்தான நிலையில் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ஒரு மணி நேரத்தில் உயிரிழந்தார்.

இதேபோல, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 85 வயது முதியவர் தனியார் மருத்துவமனையில் 20 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இஎஸ்ஐ மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ஒரு மணி நேரத்தில் உயிரிழந்தார்.

மேலும், கோவை வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த 43 வயது ஆண் கொரோனா தொற்று மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக கடந்த 8 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இஎஸ்ஐ மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் கோவை, திருப்பூர், கரூரை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா உயிரிழப்புகள் 8 ஆகவும், கோவையில் கொரோனா உயிரிழப்புகள் 10 ஆகவும் உயர்ந்துள்ளது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...